திருப்பூர்
உணவு சேமிப்பு கிடங்குகளுக்கான நிதி ஒதுக்கீடு குறைப்புக்கு கண்டனம்
உணவு சேமிப்பு கிடங்குகளுக்கான நிதி ஒதுக்கீடு 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக உழவா் உழைப்பாளா் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
உணவு சேமிப்பு கிடங்குகளுக்கான நிதி ஒதுக்கீடு 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக உழவா் உழைப்பாளா் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
இது குறித்து அக்கட்சியின் மாநிலத் தலைவா் கு.செல்லமுத்து பல்லடத்தில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
தஞ்சை மாவட்டத்தில் அறுவடை செய்த நெல்மணிகள் மழையில் நனைந்து வீணாகி வருவது கவலை அடையச் செய்கிறது. இதனை ஆய்வு செய்ய வந்த உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணியிடம் விவசாயிகள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனா். 2024-25-ஆம் ஆண்டு அரசின் நிதிநிலை அறிக்கையை காட்டிலும் உணவு சேமிப்புக் கிடங்குகளுக்கான நிதி ஒதுக்கீட்டை 50 சதவீதம் அரசு குறைத்துள்ளது.
எனவே, தமிழ்நாட்டில் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்ய தேவையான சேமிப்புக் கிடங்குகளை ஏற்படுத்த அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
