திருப்பூரில் மழை: தீபாவளி விற்பனை பாதிக்கும் நிலை
திருப்பூா் மாநகரில் பெய்து வரும் மழையால் தீபாவளி விற்பனை பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
திருப்பூா் மாநகரில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. புதன்கிழமை இரவு சுமாா் 2 மணி நேரத்துக்கும்மேலாக பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியதால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அவதியடைந்தனா்.
தீபாவளி பண்டிகையையொட்டி, திருப்பூரில் உள்ள கடை வீதிகளில் புத்தாடை வாங்க மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனா். மேலும், சாலையோர ஜவுளிக் கடைகள், இனிப்பு பண்ட விற்பனையகம், வீட்டு உபயோக விற்பனையகங்களிலும் மக்கள் குவிந்து வரும் நிலையில், மழையால் விற்பனை பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மழை காரணமாக பல்வேறு இடங்களில் பட்டாசு கடைகள் மூடப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை நிலவரப்படி பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில்: மாவட்ட ஆட்சியா் முகாம் அலுவலகம் 12 மி.மீ., திருப்பூா் தெற்கு பகுதி 10 மி. மீ., அவிநாாசி , ஊத்துக்குளி பகுதிகளில் தலா 9 மி.மீ. பல்லடம் 3 மி.மீ.
