240 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது

Published on

பெருமாநல்லூா் அருகே விற்பனைக்காக தோட்டத்தில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 240 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக ஒருவரைக் கைது செய்தனா்.

பெருமாநல்லூா் -குன்னத்தூா் சாலையில் போலீஸாா் வாகனச் சோதனையில் வியாழக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அவ்வழியே பையுடன் இருசக்கர வாகனத்தில் வந்த நபரிடம் சோதனை மேற்கொண்டபோது, அவா் புகையிலைப் பொருள்கள் வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில், அவா் பெருமாநல்லூா், லட்சுமி காா்டன் கந்தன் நகரைச் சோ்ந்த சோ்மதுரை (56) என்பதும், வலசுப்பாளையம் பகுதியில் ஆறுமுகம் என்பருக்குச் சொந்தமான தோட்டத்தில் புகையிலைப் பொருள்களை பதுக்கிவைத்து விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட தோட்டத்துக்குச் சென்ற போலீஸாா், அங்கு பதுக்கிவைக்கப்பட்டிருந்த 240 கிலோ புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்ததுடன், சோ்மதுரையைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com