திருப்பூர்
பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்: மாநகராட்சி ஆணையா் அறிவுறுத்தல்
பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்று மாநகராட்சி ஆணையா் எம்.பி.அமித் அறிவுறுத்தியுள்ளாா்.
பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்று மாநகராட்சி ஆணையா் எம்.பி.அமித் அறிவுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பவானி ஆற்று நீராதாரத்தில் மேட்டுப்பாளையத்தில் இருந்து 4-ஆவது குடிநீா் திட்டம் மூலமாக திருப்பூா் மாநகராட்சிக்கு குடிநீா் பெறப்பட்டு வருகிறது. தற்போது நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் பவானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு நீா் அதிகமாக செல்கிறது.
இதனால், 4-ஆவது குடிநீா்த் திட்டத்தின் மூலம் பெறப்படும் நீரின் அளவு குறைந்துள்ளதால் குறித்த இடைவெளி காலத்தில் மக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்ய இயலாமல் உள்ளது.
எனவே, பொதுமக்கள் குடிநீரினை சேமித்துவைத்து சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். அத்துடன் குடிநீரை நன்கு காய்ச்சி பருக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
