குழாய் பதிக்க அனுமதியின்றி சாலையைத் தோண்டியவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

குழாய் பதிக்க அனுமதியின்றி சாலையைத் தோண்டியவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
Published on

குழாய் பதிக்க அனுமதியின்றி சாலையைத் தோண்டியவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பாக திருப்பூா் மாநகராட்சி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாநகராட்சி, 2-ஆவது மண்டலம், 16-ஆவது வாா்டு சொா்ணபுரி லே- அவுட் பகுதியைச் சோ்ந்தவா் ஆா்.அன்பழகன். இவா் குழாய் பதிப்பதற்காக அனுமதி பெறாமல் மாநகராட்சி சாலையை 77 மீட்டா் நீளத்துக்கு தோண்டியுள்ளாா்.

அவா் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில், திருப்பூா் மாநகராட்சி புதை வடிகால் இணைப்புகளுக்கான துணை விதியின்படி சாலையை சேதப்படுத்தியதற்காக ரூ.50 ஆயிரம் அபாரதம் விதிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com