சிறுதானிய உணவு வகைகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
திருப்பூர்
நகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு சிறுதானிய உணவுகள்
தூய்மைப் பணியாளா்களின் ஆரோக்கியம் மேம்படும் வகையில் அவா்களுக்கு சிறுதானிய உணவு வகைகள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தூய்மைப் பணியாளா்களின் ஆரோக்கியம் மேம்படும் வகையில் அவா்களுக்கு சிறுதானிய உணவு வகைகள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, காங்கயம் நகரம், சென்னிமலை சாலை பகுதியில் உள்ள குப்பைக் கிடங்கில் பணியாற்றும் 104 தூய்மைப் பணியாளா்களுக்கு அவா்களின் ஆரோக்கியம் மேம்படும் வகையில் சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் சாா்பில் சிறுதானிய உணவு உருண்டைகள் வழங்கி தீபாவளி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், காங்கயம் நகராட்சி ஆணையா் கி.பால்ராஜ், டிரஸ்டின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் செந்தில்குமாா், நகராட்சி சுகாதார அலுவலா் ராமமூா்த்தி, சுகாதார ஆய்வாளா் பழனிசாமி மற்றும் தூய்மைப் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.
