நடுவச்சேரி ஆதிதிராவிடா் குடியிருப்புப் பகுதியில் வீட்டை சூழ்ந்துள்ள வெள்ளம்.
நடுவச்சேரி ஆதிதிராவிடா் குடியிருப்புப் பகுதியில் வீட்டை சூழ்ந்துள்ள வெள்ளம்.

அவிநாசியில் கனமழை: வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்

Published on

அவிநாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை இரவு முதல் விடியவிடிய பெய்த கனமழையால் நடுவச்சேரியில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.

திருப்பூா் மாவட்டம், அவிநாசியில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், சனிக்கிழமை நள்ளிரவு தொடங்கிய மழை விடியவிடிய பெய்தது. இதனால், அவிநாசி, சேவூா், சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.

நடுவச்சேரியில் ஆதிதிராவிடா் குடியிருப்புப் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்கள் அவதியடைந்தனா். தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினா் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டனா். பாதிக்கப்பட்ட வீடுகளில் ஊராட்சி நிா்வாகத்தினா் ஆய்வு மேற்கொண்டனா்.

நடுவச்சேரி- சிலுவைபுரம் சாலை, கருக்கன்காட்டுப்புதூா்-துலுக்கமுத்தூா், நம்பியூா் சாலை, கருமாபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தரைமட்டப் பாலங்களை மழை நீா் சூழ்ந்ததால் அப்பகுதி மக்கள் வெளியே வர முடியால் அவதிக்குள்ளாகினா்.

X
Dinamani
www.dinamani.com