கந்த சஷ்டி தொடக்க விழாவையொட்டி, சிவன்மலை முருகன் கோயிலில் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கும் சுப்பிரமணியா்.
கந்த சஷ்டி தொடக்க விழாவையொட்டி, சிவன்மலை முருகன் கோயிலில் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கும் சுப்பிரமணியா்.

சிவன்மலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா தொடக்கம்

சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா புதன்கிழமை தொடங்கியது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்து காப்புக் கட்டிக் கொண்டனா்.
Published on

காங்கயம்: சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா புதன்கிழமை தொடங்கியது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்து காப்புக் கட்டிக் கொண்டனா்.

காங்கயத்தை அடுத்துள்ள சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி, சூரசம்ஹார விழா நிகழ்ச்சிகள் புதன்கிழமை தொடங்கின. ஒரு வார காலம் நடைபெறும் இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு, புதன்கிழமை பிற்பகல் 12 மணிக்கு சுப்பிரமணியா், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து பிற்பகல் 1.30 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானையுடன் அலங்காரத்தில் உள்பிரகாரத்தை சுற்றி வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

பின்னா், சுவாமி கோயிலை சுற்றி வலம் வந்து மலையிலிருந்து அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேசுவரா் சுவாமி கோயிலுக்கு சென்றாா். இங்கு தினமும் காலை மணி 10.30 மற்றும் மாலை 6 மணிக்கு அபிஷேக ஆராதனையும், திருவீதி உலா காட்சியும் நடைபெறும்.

இந்நிகழ்ச்சியில் 1000-க்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்து கொண்டனா். வரும் 27- ஆம் தேதி சூரசம்ஹார நிகழ்ச்சியும், 28-ஆம் தேதி திருக்கல்யாண உற்சவமும், 29-ஆம் தேதி மஞ்சள் நீராட்டு உற்சவமும் நடைபெற உள்ளன. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் அலுவலா்கள், ஊழியா்கள் செய்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com