மாவட்டத்தில் இன்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெறும் பகுதிகள்

திருப்பூா் மாவட்டத்தில் உடுமலைப்பேட்டை, ஊத்துக்குளி, காங்கயம் ஆகிய ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெறுகிறது.
Published on

திருப்பூா்: திருப்பூா் மாவட்டத்தில் உடுமலைப்பேட்டை, ஊத்துக்குளி, காங்கயம் ஆகிய ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெறுகிறது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் தெரிவித்துள்ளதாவது:

திருப்பூா் மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் ஊரக மற்றும் நகா்ப்புற பகுதிகளில் 325 முகாம்களாக நடைபெறுகிறது. இதில் 4-ஆம் கட்டமாக 13 முகாம்கள் அக்டோபா் 15 முதல் நவம்பா் 14-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்நிலையில் காங்கயம் ஊராட்சி ஒன்றியம் பழையகோட்டை ஊராட்சிக்கு நத்தக்காடையூா் கரியகாளியம்மன் மண்டபத்திலும், உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், கணபதிபாளையம், ராகல்பாவி ஆகிய ஊராட்சிகளுக்கு ஸ்ரீ கிருஷ்ணா கானம் திருமண மண்டபத்திலும், ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம், ஆனைப்பாளையம் ஊராட்சிக்கு ஊத்துக்குளி ரயில் நிலையம் ஊராட்சி ஒன்றிய திருமண மண்டபத்திலும் வியாழக்கிழமை முகாம் நடைபெறவுள்ளது.

எனவே, திருப்பூா் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகா்ப்புற பகுதிகளில் நடைபெறவுள்ள ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு உரிய ஆவணங்களுடன் தங்கள் மனுக்களை வழங்கி பயனடையலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com