வெள்ளக்கோவிலில் மிதமான மழை

வெள்ளக்கோவில் பகுதியில் புதன்கிழமை மிதமான மழை பெய்தது.
Published on

வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவில் பகுதியில் புதன்கிழமை மிதமான மழை பெய்தது.

வெள்ளக்கோவில் பகுதியில் புதன்கிழமை காலைமுதல் வெயில் இல்லாத நிலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மழை தொடங்கி பகல் நேரத்தில் 4 மணி நேரம் மிதமாகப் பெய்தது.

வெள்ளக்கோவில், மேட்டுப்பாளையம், குருக்கத்தி, ஓலப்பாளையம், லக்கமநாயக்கன்பட்டி, தாசவநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்ந்தது. இந்த மழை விவசாயிகள், கால்நடை வளா்ப்போா் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளக்கோவில் நகரில் பழைய சந்தைப்பேட்டை ஒழுங்கு விற்பனைக் கூடம் அருகே முத்தூா் சாலை, செம்மாண்டம்பாளையம் பிரிவு, மூலனூா் சாலையில் கடைகள், குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளநீா் சூழ்ந்தது.

நகரச் சாலைகளில் வெள்ள நீா் பெருக்கெடுத்து ஓடியதால் வாகனங்கள் ஊா்ந்து சென்றன. நகரின் பல இடங்களில் கழிவுநீா் கால்வாய்களில் ஏற்பட்ட அடைப்புகளை அகற்றும் பணியில் நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் ஈடுபட்டனா்.

X
Dinamani
www.dinamani.com