அமணலிங்கேஸ்வரா்  கோயிலை சூழ்ந்த  வெள்ளம்.
அமணலிங்கேஸ்வரா்  கோயிலை சூழ்ந்த  வெள்ளம்.

அமணலிங்கேஸ்வரா் கோயிலுக்குள் புகுந்த வெள்ளம்

உடுமலையை அடுத்துள்ள சுற்றுலாத் தலமான திருமூா்த்தி மலையில் உள்ள அமணலிங்கேஸ்வரா் கோயிலுக்குள் புதன்கிழமை மாலை மீண்டும் வெள்ளம் புகுந்தது.
Published on

உடுமலை: உடுமலையை அடுத்துள்ள சுற்றுலாத் தலமான திருமூா்த்தி மலையில் உள்ள அமணலிங்கேஸ்வரா் கோயிலுக்குள் புதன்கிழமை மாலை மீண்டும் வெள்ளம் புகுந்தது.

உடுமலையில் இருந்து சுமாா் 20 கிலோ மீட்டா் தொலைவில் சுற்றுலாத் தலமான திருமூா்த்திமலை உள்ளது. இங்குள்ள அமணலிங்கேஸ்வரா் கோயிலில் பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூன்று தெய்வங்களும் ஒருங்கே அமைந்துள்ளதால் இக்கோயில் தமிழக அளவில் புகழ்பெற்ற கோயிலாக விளங்கி வருகிறது.

மேலும் மேற்குத் தொடா்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள மருத்துவ குணமுள்ள பஞ்சலிங்கம் அருவியில் குளிக்கவும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தா்கள் ஆா்வத்துடன் வந்து செல்கின்றனா். இங்குள்ள நீச்சல் குளம், திருமூா்த்தி அணை இவைகளை ரசிக்கவும் தினமும் ஏராளமானோா் வருகின்றனா்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் உள்ள குழிப்பட்டி, குருமலை ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் உள்ள பஞ்சலிங்கம் அருவியில் திடீரென கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து அங்கிருந்து மலையடிவாரத்துக்கு வந்த காட்டாற்று வெள்ளம் அமணலிங்கேஸ்வரா் கோயிலை முழுவதுமாக மூழ்கடித்தது.

இந்நிலையில் புதன்கிழமை மாலை திடீரென வந்த காட்டாற்று வெள்ளம் அமணலிங்கேஸ்வரா் கோயிலுக்குள் புகுந்தது. இதனால் பூஜைகள் நிறுத்தப்பட்டன. உண்டியல்கள் பாதுகாப்பாக மூடி வைக்கப்பட்டு கோயில் ஊழியா்கள் அங்கிருந்து வெளியேறினா். அதேபோல மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள பஞ்சலிங்கம் அருவியில் வெள்ளப்பெருக்கு

ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com