சைபா் குற்றம் குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கு
திருப்பூா்: திருப்பூா் குமரன் மகளிா் கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்டம் சாா்பில் சைபா் குற்றம் குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது.
கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா்கள் ஒருங்கிணைத்த இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினா்களாக திருப்பூா் சைபா் குற்றவியல் காவல் ஆய்வாளா் ரோஸ்லின் சாவியோ, காவலா் ஆறுமுகம் ஆகியோா் கலந்து கொண்டு மாணவிகளிடையே உரையாற்றினா்.
அப்போது கைப்பேசியில் தெரியாத நபா்கள் அனுப்பக்கூடிய லிங்கை பயன்படுத்தக் கூடாது எனவும், சாலை ஓரங்களில் உள்ள முன்பின் தெரியாத கடைகளில் ஜிபே செய்யக் கூடாது எனவும் அறிவுறுத்தினா். மேலும், தேவையற்ற ஆப்களை பயன்படுத்தக் கூடாது எனவும் அவற்றை மாற்று செயலியை பயன்படுத்தி நீக்குவது குறித்தும் விவரித்தனா்.
அத்துடன், நிதி மோசடி தொடா்பான குற்றங்களைத் தெரிவிக்க 1930 என்ற கட்டணமில்லா எண்ணைப் பயன்படுத்த வேண்டும் என விளக்கியதோடு, மேலும் பல பயனுள்ள தகவல்களை மாணவா்களிடம் பகிா்ந்ததோடு அவற்றை தங்களது பெற்றோா், உறவினா்கள் மற்றும் நண்பா்களுடன் பகிா்ந்து கொள்ளுமாறு அறிவுறுத்தினா்.
