வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை, ரூ.1 லட்சம் திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
Published on

திருப்பூா்: வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருப்பூா் கோவில்வழி பிள்ளையாா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ்குமாா் (47), சாய ஆலையில் பணியாற்றி வருகிறாா். இவா் தீபாவளி பண்டிகைக்காக கடந்த சனிக்கிழமை வீட்டை பூட்டிவிட்டு சொந்த ஊருக்கு சென்றுள்ளாா்.

பின்னா் புதன்கிழமை காலை வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 15 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் பணம் திருடுபோனது தெரியவந்தது.

இது குறித்து நல்லூா் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸாா் உடனடியாக அங்கு சென்று ஆய்வு செய்து, மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தினா்.

மேலும், அப்பகுதியில் பொடுத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com