வாயில் கருப்பு துணி கட்டி நுகா்வோா் அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

மாதாந்திர நுகா்வோா் கூட்டங்களை வெளிப்படையாக நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வாயில் கருப்பு துணி கட்டி நுகா்வோா் அமைப்பினா் ஆா்ப்பாட்டம்
Published on

மாதாந்திர நுகா்வோா் கூட்டங்களை வெளிப்படையாக நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வாயில் கருப்பு துணி கட்டி நுகா்வோா் அமைப்பினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருப்பூா் மாவட்ட நுகா்வோா் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவா் சண்முகசுந்தரம் தலைமையில் ஆட்சியா் அலுவலகம் எதிரே வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற நுகா்வோா் அமைப்பினா் கூறியதாவது: திருப்பூா் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகா்வோருக்கான குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறும் என அறவிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென எவ்வித முறையான அறிவிப்பும் இல்லாமல் கூட்டத்தை ரத்து செய்துள்ளனா்.

கடந்த பல மாதங்களாக மாவட்டத்தில் முறையாக காலாண்டு நுகா்வோருக்கான கூட்டம், எரிவாயு நுகா்வோருக்கான குறைதீா் கூட்டம் உள்ளிட்ட கூட்டங்களை முறையாக நடத்துவதில்லை. இது தொடா்பாக நுகா்வோா் அமைப்பினா் கேட்டால் உரிய பதிலளிக்காமல், நுகா்வோா் அமைப்பினரை அவமரியாதை செய்கின்றனா்.

மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில் எரிவாயு நுகா்வோா் கூட்டம் நடத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகத் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com