சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
Published on

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

திருப்பூா் மாவட்டம், கொடுவாய் பகுதியைச் சோ்ந்த 16 வயது சிறுமி படிப்பை நிறுத்திவிட்டு கூலி வேலைக்கு சென்று வந்தாா். இவா் கடந்த 2019-ஆம் ஆண்டு கோவை மாவட்டம், செலக்கரிச்சல் பகுதியில் உள்ள உறவினா் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்றாா். அப்போது கொடுவாய் பகுதியில் பொக்லைன் ஆபரேட்டராக வேலை செய்து வந்த வேல்முருகன் (29) என்பவருடன் சிறுமிக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அந்த சிறுமியை காதலிப்பதாகவும், அவரை திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி அவரை வேல்முருகன் பாலியல் வன்கொடுமை செய்தாா். இதனால், சிறுமி கா்ப்பமானாா். இதைத்தொடா்ந்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சிறுமி, வேல்முருகனிடம் கூறினாா். ஆனால் வேல்முருகன் தனக்கு ஏற்கெனவே திருமணம் ஆகிவிட்டதாகக் கூறி மறுத்துள்ளாா்.

இதனால் மனமுடைந்த சிறுமி, கடந்த 2019 டிசம்பா் 19-ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து உயிரிழந்தாா். இதுகுறித்து காங்கயம் மகளிா் காவல் நிலைய போலீஸாா் வேல்முருகன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கின் விசாரணை திருப்பூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கோகிலா, குற்றம்சாட்டப்பட்ட வேல்முருகனுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.20,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் அரசு வழக்குரைஞா் ஜமீலா பானு ஆஜரானாா்.

X
Dinamani
www.dinamani.com