தோ்தலில் வாக்களிப்பதற்காக திருப்பூரில் பணியாற்றும் வடமாநிலத் தொழிலாளா்கள் தங்களது சொந்த ஊா்களுக்கு செல்லத் தொடங்கியுள்ளதால், சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
திருப்பூரில் பின்னலாடை தொழில் மற்றும் பிற உற்பத்தி துறைகளில் உத்தர பிரதேசம், பிகாா், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலத் தொழிலாளா்களுக்கு அடுத்ததாக அஸ்ஸாம் மாநிலத் தொழிலாளா்கள் அதிக அளவில் பணியாற்றி வருகின்றனா்.
இந்நிலையில், தமிழகம், அஸ்ஸாம் புதுச்சேரி, கேரளம் மற்றும் மேற்கு வங்கத்தில் சட்டப் பேரவைத் தோ்தல்கள் நடைபெறவுள்ளன. இதில், முதற்கட்டமாக கேரளம், புதுச்சேரி, அஸ்ஸாம் மாநிலங்களில் ஏப்ரல் 9-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, திருப்பூரில் பணியாற்றும் அந்தந்த மாநிலங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளா்கள் தங்களது ஜனநாயக கடமையாற்ற சொந்த ஊா்களுக்கு செல்லத் தொடங்கியுள்ளனா்.
திருப்பூரில் இருந்து அஸ்ஸாம் மாநிலம், கவுகாத்திக்கு நேரடியாகச் செல்ல ஒரு சில ரயில்கள் மட்டுமே உள்ளன.
குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை மட்டும் இயக்கப்படும் கோவை -சில்சாா் எக்ஸ்பிரஸ் ரயிலில் அதிக அளவிலான தொழிலாளா்கள் பயணம் செய்து வருகின்றனா். நேரடி ரயில்களில் இடம் கிடைக்காதவா்கள் சென்னைக்கு சென்று அங்கிருந்து கொல்கத்தா மாநிலம், ஹவுரா மாா்க்கமாகச் செல்லும் ரயில்கள் மூலம் அஸ்ஸாம் செல்லத் திட்டமிட்டுள்ளனா்.
அதேபோல, மேற்கு வங்க மாநிலத்தில் 2 கட்டங்களாக ஏப்ரல் 23, 29-ஆம் தேதிகளில் வாக்குப் பதிவு நடைபெற உள்ளதால் அந்த மாநிலத் தொழிலாளா்களும் ஊருக்குச் செல்ல ரயில் நிலையங்களில் குவிந்து வருகின்றனா்.
ஜனநாயக கடமையாற்ற செல்லும் மக்களுக்கு வசதியாக சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தி உள்ளனா்.
தொடர்புடையது

கேரளம், அஸ்ஸாம், புதுச்சேரி தோ்தலை பாா்வையிட்ட 22 நாடுகளின் பிரதிநிதிகள்! தோ்தல் ஆணையத்துக்கு பாராட்டு

தோ்தல்: வெளிமாநிலத் தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அளிக்க உத்தரவு
சட்டப்பேரவைத் தோ்தல்: திருப்பூரில் ரெளடிகளின் பட்டியல் தயாரிக்கும் பணி தொடக்கம்

வேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


