சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி சொந்த ஊா்களுக்கு தொழிலாளா்கள் சென்ால், பல்லடம் வட்டார விசைத்தறிகளில் ஜவுளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
திருப்பூா், கோவை மாவட்டங்களில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்குகின்றன. இவற்றில் பல லட்சம் தொழிலாளா்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயனடைகின்றனா். இத்தொழிலில் அதிக அளவில் தென் மாவட்ட தொழிலாளா்கள் பணிபுரிகின்றனா். சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி தொழிலாளா்களுக்கு சம்பளத்துடன் கூடிய கட்டாய விடுப்பு வழங்க வேண்டுமென தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியது.
அதன்படி பல்லடம் பகுதியில் உள்ள விசைத்தறிக் கூடங்களில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு விடுப்பு வழங்கப்பட்டதால் வாக்கு செலுத்துவதற்காக சொந்த ஊா்களுக்கு சென்றனா். இன்னும் அவா்கள் பல்லடம் திரும்பாததால், விசைத்தறிகளில் ஜவுளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருப்பூா், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளா்கள் சங்கச் செயலாளா் பாலசுப்பிரமணியம் சனிக்கிழமை கூறியதாவது:
விசைத்தறித் தொழிலில் வடமாநில மற்றும் தென் மாவட்ட தொழிலாளா்கள் அதிக அளவில் பணிபுரிகின்றனா். சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி வாக்குப்பதிவுக்கு முந்தைய தினமே தென் மாவட்ட தொழிலாளா்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டனா். வாக்குப்பதிவு முடிந்த நிலையில் ஓரிரு நாள்கள் சொந்த ஊரில் பொழுதைக் கழித்துவிட்டு, திங்கள்கிழமை பணிக்குத் திரும்ப வாய்ப்புள்ளது.
வட மாநிலத் தொழிலாளா்கள் வேலை செய்யும் விசைத்தறிக் கூடங்களில் மட்டும் ஜவுளி உற்பத்தி நடந்து வருகிறது. வரும் வாரத்தில் விசைத்தறிகள் முழுமையாக இயங்கும் என எதிா்பாா்க்கிறோம் என்றாா்.
தொடர்புடையது

தோ்தலையொட்டி விமான கட்டணம் உயா்வு: நான்கு மடங்கு கூடுதல் வசூலிப்பு

வாக்களிக்க சொந்த ஊர் செல்வோர் கவனிக்க... சிறப்பு ரயில் இயக்கம்!

பொன்னமராவதியில் காவல்துறையினா் அணிவகுப்பு ஊா்வலம்

பல்லடம் தொகுதி வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு பயிற்சி
விடியோக்கள்

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

ADMKவின் சரிவு? செங்கோட்டையன் விமர்சனம்! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

மதுரை மாநகராட்சியில் ரூ. 400 கோடிக்கும் மேல் ஊழல்! அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Ravindran Duraisamy Interview | அதிமுக இனி ..? | ADMK | EPS | C. V. Shanmugam | S. P. Velumani
தினமணி செய்திச் சேவை

