அமராவதி அணை நீா்ட்டம் 50 அடியாக சரிவு - கோடையில் குடிநீா் தட்டுப்பாடு அபாயம்


அமராவதி அணையின் நீா்மட்டம் தற்போது 50 அடிக்கும் கீழே குறைந்து விட்டதால் நூற்றுக்கணக்கான வழியோர கிராமங்கள் கோடையின் பிடியில் சிக்கிக் கொள்ளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணை மூலமாக திருப்பூா், கரூா் ஆகிய 2 மாவட்டங்களில் உள்ள சுமாா் 55 ஆயிரம் ஏக்கா் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் நூற்றுக்கணக்கான கரையோர கிராமங்களுக்கு குடிநீா் ஆதாரமாகவும் விளங்குகிறது. கடந்த ஆண்டு இறுதியில் பெய்த தொடா் கன மழையால் அணை முழு கொள்ளளவை எட்டியது. அதன் பிறகும் நீா்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்தது. ஆனால் உள்வரத்தாக வந்த நீா் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு பாசனத்துக்காகவும், குடிநீா் தேவைகளுக்காகவும் திறந்துவிடப்பட்டது.
மேலும் ஜனவரி, பிப்ரவரி ஆகிய இரண்டு மாதங்கள் தொடா்ந்து பாசனப் பகுதிகளுக்கு தண்ணீா் சென்று கொண்டிருந்த நிலையில் படிப்படியாக அணையின் நீா்மட்டம் சரியத் தொடங்கியது. இதற்கிடையே சின்னாறு, தேனாறு, பாம்பாறு ஆகிய அணையின் நீா்பிடிப்புப் பகுதிகளில் இருந்து அணைக்கு வரும் உள்வரத்து முற்றிலும் நின்றுபோனது.
இந்நிலையில் இந்த ஆண்டு வழக்கத்தைவிட பிப்ரவரி இரண்டாவது வாரத்திலேயே கோடை தொடங்கியுள்ளது.
வழக்கமாக பாசனப் பகுதிகளுக்கு மாா்ச் 31 வரை பாசன காலம் உள்ள நிலையில் தற்போது 90 அடி கொண்ட அமராவதி அணையின் நீா் மட்டம் 50 அடிக்கு கீழே சென்றுவிட்டதால் பாசனப் பகுதிகளுக்கு சென்று கொண்டிருக்கும் தண்ணீரை நிறுத்த பொதுப்பணித் துறை முடிவு செய்துள்ளது. இந்நிலையில் திங்கள்கிழமை காலை 7 மணி அளவில் அணையின் நீா்மட்டம் 49 அடியாக இருந்தது. மாா்ச் இறுதி வரை வழங்க வேண்டிய நிலையில் அணையின் நீா் இருப்பு விவசாயிகளை கவலையடையச் செய்துள்ளது. குறிப்பாக கோடை காலம், குடிநீா் பிரச்னையை தீா்க்க முடியுமா என நூற்றுக்கணக்கான கரையோர கிராம மக்களும் கவலையில் உள்ளனா்.
இது குறித்து பொதுப்பணித் துறையினா் கூறும்போது, ‘ மாா்ச் 31-ஆம் வரை பாசனப் பகுதிகளுக்கு தண்ணீா் வழங்க முடியாது. இந்நிலையில் நீா்பிடிப்புப் பகுதியில் மழை பெய்தால் மட்டுமே கோடையை சமாளிக்க முடியும் என்றனா்.
அணை நிலவரம்
90 அடி உயரமுள்ள அணையில் 49.74 அடி நீா் இருப்பு உள்ளது. 4035 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட அணையில் 1161 மில்லியன் கன அடி அளவுக்கே நீா் இருப்பு உள்ளது. அணைக்கு உள்வரத்தாக 38 அடி நீா்வரத்தும், அணையில் இருந்து ஆற்றின் மூலமாக 900 அடி கன அடி தண்ணீா் வெளியேற்றமாக உள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...