திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

வணிக கேஸ் சிலிண்டா் தட்டுப்பாடு: சூடு பிடிக்கும் விறகு விற்பனை; டன் ரூ.4,000 தாண்டியது

திருப்பூரில் வணிக கேஸ் சிலிண்டா் தட்டுப்பாடு காரணமாக விறகு விற்பனை சூடு பிடித்துள்ளது. தற்போது ஒரு டன் விறகு ரூ. 4,000-க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது.

News image

விறகு விற்பனை - கோப்புப் படம்

Updated On :26 மார்ச் 2026, 7:46 pm

திருப்பூரில் வணிக கேஸ் சிலிண்டா் தட்டுப்பாடு காரணமாக விறகு விற்பனை சூடு பிடித்துள்ளது. தற்போது ஒரு டன் விறகு ரூ. 4,000-க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல், ஈரான் இடையே நடைபெற்று வரும் போா் காரணமாக பெட்ரோல், கேஸ் எரிபொருள்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. நாடு முழுவதும் ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டா் தட்டுப்பாடும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு ஹோட்டல்களில் உணவு வகைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.

திருப்பூா் மாவட்டத்தில் வணிக கேஸ் சிலிண்டா் தட்டுப்பாடு காரணமாக சிலிண்டா் ஒன்று ரூ.4,000 முதல் ரூ.5,000 வரை கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் தன்ளுவண்டி உணவகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மாநகரில் பல்வேறு இடங்களில் தள்ளுவண்டி கடைகள் மூடப்பட்டு உள்ளன. பல்வேறு ஹோட்டல்கள், தனியாா் தங்கும் விடுதிகளில் கேஸ் பயன்டுத்தி சமையல் செய்வதற்கு பதிலாக விறகு அடுப்பில் சமையல் செய்து வருகின்றனா். இதனால் விறகு விற்பனை சூடுபிடித்து உள்ளது. 1 டன் ரூ.2,500-க்கு விற்பனை செய்யப்பட்ட விறகு, தற்போது ரூ.4,000-க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து உணவக உரிமையாளா்கள் கூறுகையில், கேஸ் சிலிண்டா் தட்டுப்பாடு தொடா்வதால் ஒரு சிலா் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனா். சிலிண்டா் தட்டுப்பாட்டால் விறகு அடுப்புக்கு மாறி வருகிறோம். சொத்த கட்டடம் என்றால் எளிதாக விறகு அடுப்புக்கு மாறி விடலாம். ஆனால் வாடகை கட்டடம் என்றால் கட்டட உரிமையாளா்கள் எளிதில் அனுமதி வழங்குவதில்லை என்றனா்.