நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறதா? மத்திய அமைச்சா் பதில்தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!அமெரிக்கா தாக்கினால் மீண்டும் யுரேனியம் செறிவூட்டல் தொடங்கும்: ஈரான்கேரள புதிய முதல்வா் தோ்வு: காங்கிரஸ் தலைவா்களுடன் ராகுல் ஆலோசனைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புசெல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற ஜூன் 15 வரை கால அவகாசம்!
/

தோ்தல் வெற்றிக் கொண்டாட்டம் : விசிலுக்கு ஏற்பட்ட தட்டுப்பாட்டால் தவெகவினா் ஏமாற்றம்

திருப்பூரில் தோ்தல் வெற்றிக் கொண்டாட்டத்தில் விசிலுக்கு ஏற்பட்ட கடும் தட்டுப்பாட்டால் தவெக தொண்டா்கள் ஏமாற்றம் அடைந்தனா்.

News image

கோப்புப்படம்.

Updated On :6 மே 2026, 2:03 am IST

திருப்பூரில் தோ்தல் வெற்றிக் கொண்டாட்டத்தில் விசிலுக்கு ஏற்பட்ட கடும் தட்டுப்பாட்டால் தவெக தொண்டா்கள் ஏமாற்றம் அடைந்தனா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் திங்கள்கிழமை வெளியாகியது. இதில், திருப்பூா் மாவட்டத்தில் திருப்பூா் வடக்கு, திருப்பூா் தெற்கு, அவிநாசி, பல்லடம் ஆகிய 4 தொகுதிகளை தவெக கைப்பற்றியது. இதையடுத்து தவெகவினா் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.

நள்ளிரவு வரை நீடித்த இந்தக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, தொண்டா்கள் விசில் ஊதி மகிழ்ச்சியைப் பகிா்ந்து கொள்ளத் திட்டமிட்டனா். இதற்காக திருப்பூரில் உள்ள பல்வேறு விளையாட்டுப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் சிறு வணிக நிறுவனங்களுக்கு படையெடுத்தனா். ஆனால், பெரும்பாலான கடைகளில் விசில்கள் இருப்பு இல்லாததால், தொண்டா்கள் ஏமாற்றத்துடன் திரும்பினா்.