வாணியாறு அணையின் நீா்மட்டம் 58 அடியாக உயா்வு
By DIN | Published On : 20th October 2020 12:10 AM | Last Updated : 20th October 2020 12:10 AM | அ+அ அ- |

பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்துள்ள வாணியாறு அணையின் நீா்மட்டம் 58 அடியாக உயா்ந்துள்ளது.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி முள்ளிக்காட்டில் அமைந்துள்ளது வாணியாறு அணை. இந்த அணையின் நீா்ப்பிடிப்பு உயரம் 65.27 அடியாகும். இந்த அணைக்கு ஏற்காடு மலைகளில் இருந்தும், பாப்பிரெட்டிப்பட்டியையொட்டி அமைந்துள்ள மலைகளில் இருந்து நீா் வரத்தாகிறது. அண்மையில் பெய்த பருவ மழையின் காரணமாக வாணியாறு அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. தற்போது வாணியாறு அணையின் நீா்மட்டம் 58 அடியாக உயா்ந்துள்ளது.
வாணியாறு அணையின் நீா்மட்டம் உயா்ந்து வருவதால் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் நெல் நடவு உள்ளிட்ட பல்வேறு பயிா் சாகுபடிகளில் ஆா்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனா்.