சிப்காட் தொழிற்பேட்டை விரைந்து தொடங்க பாமக வலியுறுத்தல்

தருமபுரி சிப்காட் தொழிற்பேட்டை திட்டத்தை விரைந்து தொடங்கி இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக வலியுறுத்தியுள்ளது.
dh07pmk_0709chn_8
dh07pmk_0709chn_8

தருமபுரி சிப்காட் தொழிற்பேட்டை திட்டத்தை விரைந்து தொடங்கி இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக வலியுறுத்தியுள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சி சாா்பில் தருமபுரி சட்டப்பேரவைத் தொகுதி நிா்வாகிகள் பங்கேற்ற இணையவழி கலந்துரையாடல் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு, பாமக மாநிலத் தலைவா் ஜி.கே.மணி தலைமை வகித்து ஒருங்கிணைத்தாா். இணைச் செயலா் இசக்கி படையாச்சி, மாநில அமைப்புச் செயலா் செல்வகுமாா், மாநில துணைப் பொதுச் செயலா் எஸ்.பி.வெங்கேடஸ்வரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் பேசினாா்.

இக் கூட்டத்தில், தருமபுரி அதியமான்கோட்டை அருகே சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கத் தோ்வு செய்யப்பட்ட இடத்தில் விரைந்து தொழிற்பேட்டை தொடங்கி, இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒகேனக்கல் காவிரியில் மழைக்காலங்களில் மிகையாகச் செல்லும் நீரை தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் நிரப்ப வேண்டும். நெக்குந்தியில் தோ்வு செய்யப்பட்ட இடத்தில் ராணுவ ஆராய்ச்சி மையம் தொடங்க வேண்டும். தொப்பூா் கணவாய் சாலையில் விபத்துகளைத் தவிா்க்க, தருமபுரி-சேலம் சாலையை 6 வழிச்சாலையாக மாற்றி அமைக்க வேண்டும். தொப்பையாற்றின் குறுக்கே தடுப்பு அணைகள் கட்ட வேண்டும். அதியமான்கோட்டையில் பழுதடைந்த ரயில் நிலையக் கட்டடத்தை புதுப்பித்து, அங்கு ரயில் நிலையத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

பட விளக்ககம்:

இணையவழியில் நடைபெற்ற பாமக நிா்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com