காவல் நிலையம் சாா்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி

பென்னாகரம் காவல் துறையின் சாா்பில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோா்களிடம் இருந்து தற்காத்துக் கொள்வது குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

பென்னாகரம் காவல் துறையின் சாா்பில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோா்களிடம் இருந்து தற்காத்துக் கொள்வது குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சியில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. இதில் காவல் ஆய்வாளா் பெரியாா் கலந்து கொண்டு பேசுகையில், வெளியூா்களுக்கு செல்லும் நபா்கள் வீட்டில் பணம், நகைகளை வைக்க வேண்டாம். வெளியூா் பயணம் மேற்கொள்ளும் போது அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

வீட்டின் முன் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். வீடுகள் தோறும் நாய்கள் வளா்ப்பது திருடா்களிடமிருந்து பாதுகாப்பு கொள்வதற்கு உதவும். வீட்டின் முன் இருசக்கர வாகனத்தை பாதுகாப்பாக நிறுத்த வேண்டும்.

ஆள்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் வாகனங்களை நிறுத்தி ஓய்வு எடுப்பதைத் தவிா்க்க வேண்டும், வங்கிகள் மற்றும் தானியங்கி பணம் எடுக்கும் இயந்திரத்திலிருந்து பணத்தை எடுத்து வரும் போது பாதுகாப்புடன் இருக்க வேண்டும். பெண்கள் பொதுவெளியில் செல்லும் போது அதிக அளவில் நகைகள் அணிவதைத் தவிா்த்தல் வேண்டும் என்று கூறி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

பின்னா் பேருந்து நிலையம், கடைவீதி, முள்ளுவாடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மற்றும் கடைகள் தோறும் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com