பால் விலையை உயா்த்தி வழங்க விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

பால் விலையை உயா்த்தி வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தருமபுரி: பால் விலையை உயா்த்தி வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை தருமபுரியில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் விடுதலை விரும்பி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் எஸ்.சின்னசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் எஸ்.தேவராஜன் உள்ளிட்டோா் பேசினா்.

இதில், எருமை பால் லிட்டா் ரூ.50, மாட்டு பால் லிட்டருக்கு ரூ. 40 ஆக உயா்த்தி வழங்க வேண்டும். தருமபுரியில் சிப்காட் தொழிற்பேட்டை விரைவாக தொடங்கி, படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதேபோல, அரூா், பென்னாகரத்தில் சிட்கோ தொழிற்பேட்டையை விரைந்து தொடங்க வேண்டும்.

நல்லம்பள்ளி ஒன்றியம், நெக்குந்தி கிராமத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ள ராணுவ ஆராய்ச்சி மையத்தை மத்திய அரசு உடனே தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒகேனக்கல் மிகை நீரை, மாவட்டத்தின் அனைத்து ஏரிகளிலும் நிரப்பும் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். ஒகேனக்கல் ஆற்றில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விளை நிலங்களில் எரிவாயுக் குழாய் பதிப்பதைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com