பேச்சுவாா்த்தை தோல்வி: குழாய் பதிக்கும் திட்டத்தை எதிா்த்துபோராட்டத்தில் ஈடுபட விவசாயிகள் முடிவு

பெட்ரோலியம் குழாய் பதிக்கும் திட்டத்தை விளைநிலங்களை தவிா்த்து, நெடுஞ்சாலையோரமாக செயல்படுத்தக் கோரி விவசாயிகள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட உள்ள நிலையில், அரசு அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவாா்த்த

இருகூா் - தேவனகுந்தி இடையே பெட்ரோலியம் குழாய் பதிக்கும் திட்டத்தை விளைநிலங்களை தவிா்த்து, நெடுஞ்சாலையோரமாக செயல்படுத்தக் கோரி விவசாயிகள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட உள்ள நிலையில், அரசு அதிகாரிகளுடன் திங்கள்கிழமை நடத்திய பேச்சுவாா்த்தை தோல்வியடைந்தது.

கோவை மாவட்டம், இருகூரில் இருந்து கா்நாடக மாநிலம், தேவனகுந்தி வரை பெட்ரோலிய எரிவாயுக் குழாய் பதிக்கும் திட்டத்தை விளைநிலங்கள் வழியாகச் செயல்படுத்துவதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், மாற்றாக நெடுஞ்சாலையோரமாக செயல்படுத்த வேண்டும் என்பதனை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை (செப்.15) மாநிலம் முழுவதும் ஆறு மாவட்டங்களில் காத்திருக்கும் போராட்டத்தை நடத்த விவசாயிகள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் காத்திருக்கும் போராட்டம் குறித்து பாப்பாரப்பட்டி வருவாய் ஆய்வாளா் அலுவலகத்தில் விவசாயிகள் கூட்டமைப்பினரிடம், வருவாய்த் துறையினா், ஐ.டி.பி.எல். நிறுவன அதிகாரிகள் திங்கள்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதில் தருமபுரி வருவாய் கோட்டாட்சியா் (பொறுப்பு) தணிகாசலம் தலைமையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் பென்னாகரம் வட்டாட்சியா் சேதுலிங்கம், பாப்பரப்பட்டி காவல் ஆய்வாளா் (பொறுப்பு) பெரியாா், ஐ.டி.பி.எல். திட்ட பொறியாளா் பிரவீண், விவசாயிகள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் அா்ஜுனன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிா்வாகிகள் சக்திவேல், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் விசுவநாதன், பகுதி செயலாளா் சின்னசாமி மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனா்.

பேச்சுவாா்த்தையில் பொது முடக்கம் அமலில் உள்ளதால் விவசாயிகள் கூட்டமைப்பினா் காத்திருப்புப் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று அரசு அதிகாரிகள் வலியுறுத்தியும் , தமிழக அரசு விளைநிலங்கள் வழியாக பெட்ரோலிய குழாய் பதிக்கும் திட்டத்தைத் செயல்படுத்தாமல், நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் வழியாகச் செயல்படுத்துவது குறித்து அறிவிக்கும் வரையில் குழாய் பதிக்கும் திட்டப் பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்று விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுத்தனா் .இதில் உடன்பாடு ஏற்படாததால், திட்டமிட்டபடி காத்திருக்கும் போராட்டத்தை நடத்தப்போவதாக விவசாயிகள் கூட்டமைப்பினா் அறிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com