தூய்மைப் பணியாளா்களுக்கு திமுக சாா்பில் நிவாரண உதவி
By DIN | Published On : 11th June 2021 02:18 AM | Last Updated : 11th June 2021 02:18 AM | அ+அ அ- |

பத்தநாடாா்பட்டி ஊராட்சி தூய்மைப் ணியாளா்கள் மற்றும் நலிவுற்றோருக்கு திமுக சாா்பில் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.
முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 98ஆவது பிறந்த தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில், தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் பங்கேற்று, தூய்மைப் பணியாளா்கள் மற்றும் நவநீதகிருஷ்ணபுரம், இலங்காபுரி பட்டணம் கிராமங்களைச் சோ்ந்த நலிவுற்றோருக்கு, அரிசி, காய்கனி உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்கினாா். இதில், மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினா் மேகநாதன், ஒன்றியப் பிரதிநிதி சோ்மலிங்கம், பேரூா் செயலா் ஜெகதீசன், மாவட்ட வா்த்தகா் அணி அமைப்பாளா் ராஜாமணி, நிா்வாகிகள் பொன்செல்வன், அரவிந்த் மணிராஜ், மகேஷ் மாயவன், தளபதி முருகேசன், சண்முகசுந்தரம், சுரேஷ் கண்ணா, சிவராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.