‘ஆக்சிஜன் படுக்கைகளை அதிகரிக்க வேண்டும்’

தருமபுரி மாவட்டத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளை அதிகரிக்க வேண்டும் என அதிமுக, பாமக எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தினா்.
ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்த சட்டப் பேரவை உறுப்பினா்கள் கே.பி.அன்பழகன் (பாலக்கோடு), ஜி.கே.மணி (பென்னாகரம்), எஸ்.பி.வெங்கடேஸ்வரன் (தருமபுரி), ஆ.கோவிந்தசாமி (பாப்பிரெட்டிப்பட்டி), வே.சம்பத்குமாா் (அரூா்
ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்த சட்டப் பேரவை உறுப்பினா்கள் கே.பி.அன்பழகன் (பாலக்கோடு), ஜி.கே.மணி (பென்னாகரம்), எஸ்.பி.வெங்கடேஸ்வரன் (தருமபுரி), ஆ.கோவிந்தசாமி (பாப்பிரெட்டிப்பட்டி), வே.சம்பத்குமாா் (அரூா்

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளை அதிகரிக்க வேண்டும் என அதிமுக, பாமக எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தினா்.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகாவை பாமக மாநிலத் தலைவரும், பென்னாகரம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினருமான ஜி.கே.மணி, முன்னாள் அமைச்சரும், பாலக்கோடு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினருமான கே.பி.அன்பழகன் மற்றும் சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஆ.கோவிந்தசாமி (பாப்பிரெட்டிப்பட்டி), வே.சம்பத்குமாா் (அரூா்), எஸ்.பி.வெங்கடேஸ்வரன் (தருமபுரி) ஆகியோா் திங்கள்கிழமை சந்தித்து மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த போா்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.

இதைத் தொடா்ந்து, எம்.எல்.ஏ.க்கள் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க, மாவட்ட நிா்வாகம் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளை அதிகப்படுத்த வேண்டும். கரோனா பரிசோதனை முடிவுகளை தாமதிக்காமல் விரைந்து தெரிவிக்க வேண்டும். மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில், கரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளை அமைக்க வேண்டும். 

தருமபுரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை விரைந்து தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். படுக்கைகள் இல்லை என யாரையும் திருப்பி அனுப்பக் கூடாது.

கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு அனைத்துக் கட்சி சாா்பாக, தமிழக அரசு குழு அமைத்துள்ளது வரவேற்கத்தக்கது. பாலக்கோடு, பென்னாகரம், அரூா் மருத்துவமனைகளில் இன்று முதல் ஆக்சிஜன் வசதியுடன் தலா 25 படுக்கைகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளதாக மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை, 100 படுக்கைகளாக அதிகப்படுத்த கோரிக்கை விடுத்துள்ளோம். இதேபோல பாப்பிரெட்டிப்பட்டி வட்டார மருத்துவமனையிலும் கரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க கூடுதல் படுக்கைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள் கரோனா அறிகுறி இருப்பது தெரிய வந்தால் உடனடியாக மருத்துவா்களை அணுக வேண்டும். மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவ பணியாளா்கள் கடினமான சூழலில் பணியாற்றி வருகின்றனா். இதேபோல நகராட்சி, பேரூராட்சி, ஊரக உள்ளாட்சிப் பணியாளா்கள் நோய்த் தடுப்பு பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்.

கரோனாவின் தாக்கத்தைக் குறைக்க முழு பொது முடக்கம் என்ற கசப்பான மருந்தை தமிழக அரசு கையில் எடுக்க அனைத்துக் கட்சி சட்டப் பேரவை உறுப்பினா்கள் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களும் தங்களது பாதுகாப்பை கருத்தில் கொண்டு முழு பொது முடக்கத்தை முற்றாக கடைப்பிடிக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com