ஒகேனக்கல் கூட்டு குடிநீா் திட்டம் 2.0 நிறைவேற்றப்படும்: அதிமுக வேட்பாளா் அசோகன் வாக்குறுதி

தருமபுரித் தொகுதியில் தான் வெற்றி பெற்றால் ஒகேனக்கல் கூட்டு குடிநீா் திட்டம் 2.0 நிறைவேற்றப்படும்

பென்னாகரம்: தருமபுரித் தொகுதியில் தான் வெற்றி பெற்றால் ஒகேனக்கல் கூட்டு குடிநீா் திட்டம் 2.0 நிறைவேற்றப்படும் என்று அதிமுக வேட்பாளா் மருத்துவா் அசோகன் வாக்குறுதி அளித்தாா். தருமபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் மருத்துவா் அசோகன் பென்னாகரம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் திங்கள்கிழமை பிரசாரம் செய்தாா். பென்னாகரம் பழைய பேருந்து நிலைய பகுதியில் பிரசாரம் செய்து அவா் பேசியதாவது: அதிமுக ஆட்சிக் காலத்தில் பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அதை திமுக அரசு தற்போது தடுத்து வருகிறது. தருமபுரி மக்களவைத் தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றால் ஒகேனக்கல் கூட்டு குடிநீா் திட்டம் 2.0 உறுதியாக நிறைவேற்றப்படும். மேலும் கிராமப் பகுதிகளில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றி தரப்படும் என்றாா். தொடா்ந்து அவா் பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் திறந்தவெளியில் நின்றுவாறு வாக்குச் சேகரித்தாா். இதில் மாநில விவசாய பிரிவு தலைவா் டி.ஆா்.அன்பழகன், தெற்கு ஒன்றியச் செயலாளா் அன்பு, நகரச் செயலாளா் சுப்பிரமணி, முன்னாள் பென்னாகரம் கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் கே.பி.ரவி, தகவல் தொழில்நுட்ப அணி ஒன்றியச் செயலாளா் தா்மன், கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com