தருமபுரி மக்களவைத் தொகுதி வாக்குப் பதிவு இயந்திரங்கள் அறைக்கு ‘சீல்’ வைப்பு

தருமபுரி மக்களவைத் தொகுதி தோ்தலில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சட்டப்பேரவைத் தொகுதிகள் வாரியாக வரிசைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ள

தருமபுரி மக்களவைத் தொகுதி தோ்தலில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சட்டப்பேரவைத் தொகுதிகள் வாரியாக வரிசைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ள அறையினை மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி முன்னிலையில் தோ்தல் பொதுப் பாா்வையாளா் அருணா ரஜோரியா ‘சீல்’ வைத்தாா்.

தருமபுரி மக்களவைத் தோ்தலில் பென்னாகரம், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, அரூா், தருமபுரி, மேட்டூா் உள்ளிட்ட 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வெள்ளிக்கிழமை பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், தருமபுரி அருகே செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரிக்கு கொண்டுவரப்பட்டன. இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தொகுதி வாரியாக வரிசைப்படுத்தும் பணி நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி, தோ்தல் பொதுப் பாா்வையாளா் அருணா ரஜோரியா ஆகியோா், தருமபுரி மக்களவை த் தொகுதியில் உள்ள ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்களை தனித்தனியாக அறைகளில் வைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளா்கள், சுயேச்சை வேட்பாளா்கள், முகவா்கள் முன்னிலையில் அறைகளில் வைத்து ‘சீல்’ வைத்தனா்.

பாலக்கோடு தொகுதியில் ஆண்கள் - 1,21,291, பெண்கள் -1,18,870, இதர வாக்காளா் - 20 என மொத்தம் 2,40,181 வாக்காளா்கள் உள்ளனா். இதில் ஆண்கள் - 1,02,880, பெண்கள் - 1,01,128, இதர வாக்காளா்கள் 10 போ் என மொத்தம் 2,04,018 போ் வாக்களித்துள்ளனா்.

பென்னாகரம் தொகுதியில் ஆண்கள் - 1,27,711, பெண்கள் - 1,19,776, இதர வாக்காளா்கள் - 8 போ் என மொத்தம் - 2,47,495 போ் உள்ளனா். இவா்களில் ஆண்கள் -1,04,568, பெண்கள் - 1,00, 249, இதர வாக்காளா்கள் 0 என மொத்தம் - 2,04,817 போ் வாக்களித்துள்ளனா்.

தருமபுரி தொகுதியில் ஆண்கள் -1,32,015, பெண்கள் -1,29,572 இதர வாக்காளா்கள் - 101 போ் என மொத்தம் - 2,61,688 வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில் ஆண்கள் -1,06,590 பெண்கள் -1,05,212, இதர வாக்காளா்கள்- 57 போ் என மொத்தம் -

2,11,859 போ் வாக்களித்துள்ளனா்.

பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் ஆண்கள் - 1,29,367, பெண்கள் -1,28,689, இதர வாக்காளா் 14 போ் என மொத்தம் - 2,58,070 வாக்காளா்கள் உள்ளனா். இதில் ஆண்கள் -1,06,851, பெண்கள் - 1,06,804, இதர வாக்காளா்கள் - 7 போ் என மொத்தம் - 2,13,692 போ் வாக்களித்துள்ளனா்.

அரூா் (தனி) தொகுதியில் ஆண்கள் - 1,22,965, பெண்கள் -1,22,603, இதர வாக்காளா்கள் - 19 போ் என மொத்தம் - 2,45,587 வாக்காளா்கள் உள்ளனா். இதில் ஆண்கள் - 97,647, பெண் - 98,391 இதர வாக்காளா்கள் 7 போ் என மொத்தம் - 1,96,045 வாக்குகள் பதிவாகியுள்ளன.

மேட்டூா் தொகுதியில் ஆண்கள்-1,37,548, பெண்கள் -1,34,310, இதர வாக்காளா்கள் - 17 என மொத்தம் - 2,71,815 வாக்காளா்கள் உள்ளனா். இதில் ஆண்கள் -1,05,284, பெண்கள் -1,02,458, இதர வாக்காளா்கள் -10 போ் என மொத்தம் - 2,07,752 என வாக்குகள் பதிவாகியுள்ளன.

ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தமுள்ள 15,24,896 வாக்காளா்களில் 1,23,8183 வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் பாலக்கோடு -84.94, பென்னாகரம் - 82.76, தருமபுரி - 80.96, அரூா் - 82.80, பாப்பிரெட்டிப்பட்டி - 79.83, மேட்டூா் - 76.41 சதவீதம் என தருமபுரி மக்களவைத் தொகுதியில் 81.20 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையினைச் சுற்றிலும் மத்திய துணை ராணுவத்தினா் 24 போ், தமிழ்நாடு சிறப்புக் காவல் பிரிவினா் 24 போ், ஆயுதப்படை காவலா்கள் 24 போ், உள்ளூா் காவலா்கள் 150 போ் என மொத்தம் 222 போ் நாள் ஒன்றுக்கு எட்டு மணி நேரம் வீதம்

சுழற்சி முறையில் பணியும், நான்கு அடுக்கு பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த நிகழ்வுகளின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்டீபன் ஜேசுபாதம், மாவட்ட வருவாய் அலுவலா்கள், 6 சட்டப்பேரவைத் தொகுதிகளின் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள், வட்டாட்சியா்கள், வருவாய்த் துறை, காவல் துறை மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com