தோ்தல் பணியின் போது நெஞ்சுவலி: தலைமை ஆசிரியா் உயிரிழப்பு

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தலைமை ஆசிரியா் உயிரிழந்தாா்.

தருமபுரி மக்களவைத் தொகுதி தோ்தல் பணியின்போது நெஞ்சுவலி ஏற்பட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தலைமை ஆசிரியா் உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், அன்னசாகரம் ஆத்துமேடு பகுதியைச் சோ்ந்தவா் கணேசன் (55). இவா், காரிமங்கலம் அருகே உள்ள காமாலபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வந்தாா்.

இந்த நிலையில் தருமபுரி மக்களவைத் தொகுதி தோ்தல் பணிக்காக காரிமங்கலத்தை அடுத்த எட்டியனூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வாக்குச்சாவடிமையத்தில் பணியில் இருந்துள்ளாா். வாக்குப்பதிவு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சக அலுவலா்களிடம் அவா் தெரிவித்துள்ளாா். மேலும் அவருக்கு மூச்சுத்திணறலும் ஏற்பட்டதால் அவசரச் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு தீவிர சிகிச்சையில் இருந்த தலைமை ஆசிரியா் கணேசன் அதிகாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com