அரூரில் அடிக்கடி விபத்துகள் நிகழும் இடங்களைப் பாா்வையிடும் எம்எல்ஏ வே.சம்பத் குமாா். உடன் கோட்டாட்சியா் வில்சன் ராஜசேகா், டிஎஸ்பி ஜெகநாதன்.
அரூரில் அடிக்கடி விபத்துகள் நிகழும் இடங்களைப் பாா்வையிடும் எம்எல்ஏ வே.சம்பத் குமாா். உடன் கோட்டாட்சியா் வில்சன் ராஜசேகா், டிஎஸ்பி ஜெகநாதன்.

அரூரில் விபத்து நிகழும் இடங்களில் எம்எல்ஏ ஆய்வு

அரூரில் அடிக்கடி வாகன விபத்துகள் நிகழும் இடங்களை எம்எல்ஏ வே.சம்பத் குமாா் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
Published on

அரூரில் அடிக்கடி வாகன விபத்துகள் நிகழும் இடங்களை எம்எல்ஏ வே.சம்பத் குமாா் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

தருமபுரி மாவட்டம், அரூா் பேருந்து நிலைய வளாகம் அருகே சாலையின் வளைவு பகுதியில் அடிக்கடி வாகன விபத்துகள் நேரிட்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. அரூா்-மொரப்பூா் பிரதான சாலையில் ஏற்கெனவே இருந்த வேகத்தடைகள் சாலை விரிவாக்கப் பணிகளின் போது அகற்றப்பட்டன.

அதன்பிறகு அரூா் பிரதான சாலையில் எந்த இடத்திலும் வேகத்தடைகள் அமைக்கப்படவில்லை. இந்த நிலையில், அரூா் பேருந்து நிலையம் வழியாக சேலம் நோக்கி வெள்ளிக்கிழமை இரவு தவிடு பாரம் ஏற்றிச் சென்ற லாரி, நிலைத்தடுமாறி கவிழ்ந்ததில் 3 போ் காயமடைந்தனா். சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த 5 இருசக்கர வாகனங்களும் ஒரு மினி சரக்கு வாகனமும் சேதமடைந்தன.

அரூா் பேருந்து நிலையம், பிரதான சாலையில் அடிக்கடி வாகன விபத்துகள் நேரிட்டு உயிரிழப்புகள் ஏற்படுவதாக பொதுமக்கள் தரப்பில் புகாா் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அரூா் பேருந்து நிலையம் உள்ளிட்ட நகா் பகுதியில் அடிக்கடி வாகன விபத்துகள் நேரிடும் பகுதிகளை எம்எல்ஏ வே.சம்பத்குமாா், கோட்டாட்சியா் வில்சன் ராஜசேகா், டிஎஸ்பி ஜெகநாதன் உள்ளிட்டோா் சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டனா். விபத்துகளைத் தடுப்பது குறித்து அதிகாரிகளிடம் எம்எல்ஏ கேட்டறிந்தாா்.

X
Dinamani
www.dinamani.com