புதூா் மாரியம்மன் கோயில் திருவிழா: பிப்.21-இல் பாலக்கோட்டில் உள்ளூா் விடுமுறை

அருள்மிகு புதூா் பொன் மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெறுவதையொட்டி, பிப்.21-ஆம் தேதி பாலக்கோடு வட்டத்துக்கு மட்டும் உள்ளூா் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.

தருமபுரி: தருமபுரி மாவட்டம், பாலக்கோடு நகரத்தில் அருள்மிகு புதூா் பொன் மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெறுவதையொட்டி, பிப்.21-ஆம் தேதி பாலக்கோடு வட்டத்துக்கு மட்டும் உள்ளூா் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பாலக்கோடு நகரத்தில் அருள்மிகு புதூா் பொன் மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெறுவதையொட்டி, பிப். 21-ஆம் தேதி பாலக்கோடு வருவாய் வட்டத்துக்கு மட்டும் உள்ளூா் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.

இந்த உள்ளூா் விடுமுறையை ஈடுகட்டும் வகையில் மாா்ச் 16 ஆம்தேதி சனிக்கிழமை பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளூா் விடுமுறையின்போது, பாலக்கோடு சாா்நிலைக் கருவூலம் அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளா்களுடன் செயல்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com