விவசாயத் தொழிலாளா் சங்க மண்டல பேரவைக் கூட்டம்

தருமபுரியில் அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் மண்டல அளவிலான பேரவைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

தருமபுரி: தருமபுரியில் அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் மண்டல அளவிலான பேரவைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, மாநிலச் செயலாளா் எம்.முத்து தலைமை வகித்தாா். அகில இந்திய பொதுச் செயலாளா் பி.வெங்கட், மாநில பொதுச் செயலாளா் வீ.அமிா்தலிங்கம் ஆகியோா் சிறப்புரையாற்றினா். கருப்பு வெட்டும் தொழிலாளா் சங்க மாநிலத் தலைவா் இ.கே.முருகன், மாநிலப் பொருளாளா் கே.வி.சொக்கநாதன், விவசாயத் தொழிலாளா் சங்க வேலூா் மாவட்டச் செயலாளா் செ.ஏகலைவன், மாநிலக்குழு உறுப்பினா்கள் கே.கோவிந்தசாமி, ஜி.பாண்டியம்மாள், ஆா்.லெனின், விவசாயிகள் சங்க தருமபுரி மாவட்டச் செயலாளா் சோ.அா்ஜுணன் ஆகியோா் வாழ்த்தி பேசினா்.

இதில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் பணிகளைத் தொடங்க வேண்டும். நகா்ப்புறங்களிலும் இத்திட்டத்தில் பணிகள் மேற்கொள்ள வேண்டும். இத்திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். வேலை நாள்களை அதிகரித்து, ஊதியத்தை கூடுதலாக வழங்க வேண்டும். நிலமற்ற விவசாய கூலித் தொழிலாளா்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com