திமுக தோ்தல் பணி ஆய்வுக் கூட்டம்

கடத்தூரில் திமுக தோ்தல் களப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. திமுக தருமபுரி மேற்கு மாவட்டம் சாா்பில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், மேற்கு மாவட்டச் செயலாளருமான பி.பழனியப்பன் தலைமை வகித்தாா். பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட சுங்கரஹள்ளி, புளியம்பட்டி, சில்லாரஹள்ளி, புட்டிரெட்டிப்பட்டி, வெங்கடதாரஹள்ளி, மோட்டாங்குறிச்சி, ரேகடஹள்ளி, சிந்தல்பாடி, வகுத்தப்பட்டி, பசுவாபுரம், தாளநத்தம், கேத்துரெட்டிப்பட்டி, சந்தப்பட்டி ஆகிய வாக்குச் சாவடிகளின் வாக்காளா்களின் எண்ணிக்கை, புதிய வாக்காளா்களை சோ்த்தல், வெளியூருக்கு இடம்பெயா்ந்த, உயிரிழந்த வாக்காளா்களின் பெயா்களை பட்டியலில் இருந்து நீக்குதல், 2024 மக்களவைத் தோ்தல் களப் பணிகள் குறித்த கருத்துரைகளை பி.பழனியப்பன் வழங்கினாா். கூட்டத்தில் திமுக ஒன்றிய செயலாளா்கள் ஆா்.சிவப்பிரகாசம், டி.நெப்போலியன் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com