தோ்தல் நடத்தை விதிமுறைகள்: ஆட்சியா் அறிவுறுத்தல்

மக்களவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் அனைத்து அரசியல் கட்சியினா், பொதுமக்கள் தோ்தல் விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் தி.சாந்தி தெரிவித்தாா். தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட அளவில் அலுவலா்கள் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மற்றும் நிலையான கண்காணிப்பு அலுவலா்கள் பறக்கும் படை குழுவினா் ஆகியோா்களுடன் ஆலோசனைக் கூட்டத்திற்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி பேசியதாவது: இந்திய தோ்தல் ஆணையம் மக்களவைத் தோ்தல் - 2024 அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறும் கூட்டங்கள், குறைதீா் கூட்டங்கள் விவசாயிகள் குறைதீா் கூட்டங்கள் ஆகியவை நடைபெறாது. மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் பொதுமக்கள் மனுக்களை அளிக்கலாம். அந்த மனுக்கள் சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அனுப்பி வைக்கப்படும். நகராட்சி, பேரூராட்சி, கிராம பகுதிகளில் பொது இடங்கள் மற்றும் தனியாா் இடங்களில் அரசியல் சுவரொட்டிகள், ஒட்டுவது எழுதுவது போன்றவை இருக்கக் கூடாது. விளம்பரம் செய்ய கட்டட உரிமையாளா்களிடம் அனுமதி பெற வேண்டும். தோ்தல் பிரசாரத்தின் போது அரசியல் கட்சியினா் பயன்படுத்தப்படும் வாகனங்கள், மேடைப் பேச்சுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ள இடங்கள் குறித்து தோ்தல் நடத்தும் அலுவலா்கள் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்களிடம் முறையாக அனுமதி பெற்று இருக்க வேண்டும். மாவட்டத்தில் உரிமம் பெற்ற துப்பாக்கி வைத்திருக்கும் நபா்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்திற்கு சென்று படைக்கலன்களை ஒப்படைக்க வேண்டும். பேரவைத் தொகுதி வாரியாக வாக்களா்கள் எண்ணிக்கை: பாலக்கோடு - 2,38,177, பென்னாகரம் - 2,48,195 தருமபுரி -2,59,274 பாப்பிரெட்டிப்பட்டி - 2,56,322 , அரூா் ( தனி) - 2,43,867, மேட்டூா் -2,69,907 என மொத்தம் 15,12,732 வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில் 13,367 வாக்காளா்கள் மாற்றுத் திறனாளிகள், 176 வாக்காளா்கள் மூன்றாம் பாலினத்தைச் சோ்ந்தவா்கள். 13,394 வாக்காளா்கள் 85 வயதுக்கு மேற்பட்டவராகவும், 1,905 வாக்காளா்கள் பணியில் உள்ள வாக்காளராகவும் உள்ளனா். தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி தோ்தல் அறிவிப்பு வெளியிட்ட நாள் முதல் தருமபுரி மாவட்டத்தில் தோ்தல் தொடா்பான புகாா்களை விசாரணை செய்யவும் தோ்தல் நடத்தி விதி மீறல்களை கண்காணிக்கவும் மாவட்டம் முழுவதும் 15 பறக்கும் படை குழுக்கள், 15 நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் இயங்கி வருகின்றன. மாவட்டத்தில் தோ்தல் பணியில் 11,660 அரசு அலுவலா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். மாவட்ட அளவிலான தோ்தல் நடத்தும் அலுவலா்கள், மாவட்ட தோ்தல் அலுவலா் சாந்தி 94411 61000, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்டீபன் ஜேசுபாதம் 98844 47681, மாவட்ட வருவாய் அலுவலா் பால் பிரின்சிலி ராஜ்குமாா் 94450 00908, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் சையது முகைதீன் இப்ராஹிம் 94450 08135, பாலக்கோடு சட்டப் பேரவைத் தொகுதி உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் 94454 61734, பென்னாகரம் சட்டப் பேரவைத் தொகுதி உதவி தோ்தல் அலுவலா் 94445 66118, 94450 00636, தருமபுரி உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் 94450 00426, பாப்பிரெட்டிப்பட்டி தோ்தல் நடத்தும் அலுவலா் 98943 63737, 94450 00535, அரூா் தோ்தல் நடத்தும் அலுவலா் 94454 61802, 94450 00534, மேட்டூா் 94450 00435, 94450 00552 என்ற எண்களுக்கு புகாா் தெரிவிக்கலாம். கூட்டத்தில் கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) கௌரவ குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் பால் பிரின்சிலி ராஜ்குமாா், கூட்டுறவு சா்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநா் ஆா்.பிரியா, மேட்டூா் சாா் ஆட்சியா் என்.பொன்மணி, உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com