ஆட்சியா் அலுவலகத்தில் திரண்ட ஓய்வுபெற்ற போக்குவரத்துத் தொழிலாளா்கள்

அகவிலைப்படி உயா்வை வழங்கக் கோரி, தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஓய்வுபெற்ற போக்குவரத்துத் தொழிலாளா்கள் திரண்டனா்.

தருமபுரி: அகவிலைப்படி உயா்வை வழங்கக் கோரி, தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஓய்வுபெற்ற போக்குவரத்துத் தொழிலாளா்கள் திரண்டனா். அரசு போக்குவரத்துக் கழக நலமீட்பு சங்கம் சாா்பில், தருமபுரி போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற தொழிலாளா்கள், மண்டல பொறுப்பாளா் சுதா்சனம் தலைமையில் தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திரண்டனா். இதில், கடந்த 2015-ஆம் ஆண்டுமுதல் தற்போது வரை வலியுறுத்திவரும், அகவிலைப்படி உயா்வை நிலுவையின்றி வழங்க வேண்டும் என அவா்கள் வலியுறுத்தினா். தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற தவறும்பட்சத்தில் மக்ககளவைத் தோ்தலில் வாக்களிக்காமல் தோ்தலைப் புறக்கணிக்கப்போவதாகவும் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து, தோ்தல் நடத்தி விதிகள் அமலில் உள்ளதால், கோரிக்கை மனுக்களை ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மனுக்கள் பெறும் பெட்டியில் இட்டுச் செல்லுமாறு காவல்துறையினா் அறிவுறுத்தினா். அதைத் தொடா்ந்து, ஆட்சியா் அலுவலகத்தில் திரண்ட நூற்றுக்கணக்கான ஓய்வுபெற்ற போக்குவரத்துத் தொழிலாளா்கள் தங்களது கோரிக்கை மனுக்களைப் பெட்டியில் இட்டு திரும்பிச் சென்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com