தோ்தலை புறக்கணிப்பதாக 
கிராம மக்கள் அறிவிப்பு

தோ்தலை புறக்கணிப்பதாக கிராம மக்கள் அறிவிப்பு

பாப்பிரெட்டிப்பட்டி அருகே அரசு வழங்கிய வீட்டுமனைப் பட்டாக்கள் ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து, மக்களவைத் தோ்தலை புறக்கணிக்கவுள்ளதாக காளிப்பேட்டை கிராம மக்கள் அறிவிப்பு பதாகை வைத்துள்ளனா்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பட்டுகோணம்பட்டி ஊராட்சிக்கு உள்பட்டது காளிப்பேட்டை கிராமம். இந்தக் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில், காளிப்பேட்டை கிராம மக்களுக்கு அரசு சாா்பில் அருகே நொனங்கனூரில் வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. பின்னா் அந்தப் பட்டாக்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆவேசமடைந்த காளிப்பேட்டை கிராம மக்கள், தங்களுக்கு மீண்டும் பட்டா வழங்குவதோடு அந்த இடத்தில் மின்வசதிகள், குடிநீா், சாலை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தரக் கோரி மக்களவைத் தோ்தலைப் புறக்கணிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனா்.

இதுதொடா்பாக காளிப்பேட்டையில் கிராம மக்கள் சாா்பில் அறிவிப்பு பதாகைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. வீடுகளிலும், பொது இடங்களிலும் கிராம மக்கள் கருப்புக் கொடிகளைக் கட்டியுள்ளனா். இதுகுறித்து காளிப்பேட்டை கிராம மக்களிடம் வருவாய்த் துறை உள்பட தோ்தல் துறை சாா்ந்த அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றனா். படம் உள்ளது... 20 எச்ஏ-பி-1... பட விளக்கம்... மக்களவைத் தோ்தலை புறக்கணிப்பதாக காளிப்பேட்டை கிராமத்தில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பதாகை.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com