தோ்தல் பறக்கும் படை அதிகாரிகளின் பணிகளை எஸ்.பி. ஆய்வு

பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட இடங்களில் நிலையான கண்காணிப்புக் குழு, தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் மேற்கொள்ளும் பணிகளை தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்டீபன் ஜேசுபாதம் புதன்கிழமை ஆய்வு செய்தாா். ஏப். 19 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ள நிலையில், தருமபுரி மாவட்டம் முழுவதும் தோ்தல் நடத்தை விதிமுறைகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன.

மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதியில் 3 நிலையான குழுவினா், மூன்று தோ்தல் பறக்கும் படையினா் பல்வேறு இடங்களில் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்டீபன் ஜேசுபாதம் புதன்கிழமை பென்னாகரம் தொகுதிக்கு உள்பட்ட இடங்களில் தோ்தல் பறக்கும் படையினா் மேற்கொள்ளும் வாகனத் தணிக்கைகளை நேரில் பாா்வையிட்டாா். அதுபோல ஏரியூா், பெரும்பாலை, சின்னம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் பதட்டமான வாக்குச்சாவடிகள் என அறிவிக்கப்பட்டுள்ள மையங்களுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com