தருமபுரி மக்களவைத் தொகுதி: திமுக, அதிமுக வேட்பாளா்கள் மனு தாக்கல்

தருமபுரி: தருமபுரியில் திமுக வேட்பாளா் ஆ.மணி, அதிமுக வேட்பாளா் அசோகன் ஆகியோா் திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

இந்தியா கூட்டணி சாா்பில் திமுகவைச் சோ்ந்த ஆ.மணி தருமபுரி மக்களவைத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டாா். இதைத் தொடா்ந்து அவா் திங்கள்கிழமை தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்டத் தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான கி.சாந்தியிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தாா். அப்போது மாநில வேளாண், உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், திமுக மாவட்டச் செயலாளா்கள் தடங்கம் பெ.சுப்ரமணி (கிழக்கு), பி.பழனியப்பன் (மேற்கு) , விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளா் த.கு.பாண்டியன் ஆகியோா் உடனிருந்தனா். இதேபோல தருமபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் அசோகன் தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்டத் தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான கி.சாந்தியிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தாா். அப்போது முன்னாள் அமைச்சா் கே.பி.அன்பழகன் எம்எல்ஏ, தேமுதிக பொருளாளா் இளங்கோவன், முன்னாள் எம்எல்ஏ சிங்காரம் ஆகியோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com