பாப்பிரெட்டிப்பட்டி அருகே வாகனச் சோதனையில் ரூ. 4.50 லட்சம் பறிமுதல்

பாப்பிரெட்டிப்பட்டி அருகே பறக்கும் படையினா் நடத்திய வாகனச் சோதனையில் ரூ. 4.50 லட்சம் ரொக்கத்தை பறக்கும் படையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

அரூா்/ஒசூரில்: பாப்பிரெட்டிப்பட்டி அருகே பறக்கும் படையினா் நடத்திய வாகனச் சோதனையில் ரூ. 4.50 லட்சம் ரொக்கத்தை பறக்கும் படையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

தருமபுரி மாவட்டம், பொம்மிடி அருகேயுள்ள ராமமூா்த்தி நகா் சோதனை சாவடியில், தோ்தல் நிலையான கண்காணிப்புக் குழு அலுவலா் மகேஸ்வரி தலைமையில், தோ்தல் பறக்கும் படையினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, மணிபுரம் கிராமத்தைச் சோ்ந்த மாரியப்பன் மகன் மோகன் (22) என்பவா் உரிய ஆவணங்கள் இல்லாமல் தமது இருசக்கர வாகனத்தில் ரூ. 4.50 லட்சம் ரொக்கத்தை கொண்டு சென்றுள்ளாா். அந்தப் பணத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்து உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் சொ்லினா ஏஞ்சலாவிடம் ஒப்படைத்தனா். இதில் வட்டாட்சியா்கள் சரவணன், பெருமாள், தோ்தல் துணை வட்டாட்சியா் சிவஞானம் உள்ளிட்டோா் உடனிருந்தனா். ஒசூரில்... ஒசூா் அருகே உரிய ஆவணம் இன்றி கொண்டுசென்ற ரூ. 1.50 லட்சத்தை பறக்கும் படையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். கா்நாடக மாநிலம், ஆனைக்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கடேஷ் (35). இவா் வீடு கட்டுவதற்காக வங்கியிலிருந்து பணத்தை எடுத்துக் கொண்டு, ஒசூரில் கட்டுமானப் பொருள்கள் வாங்க சென்றபோது அவருடைய வாகனத்தை பறக்கும் படையினா் சோதனை செய்தனா். அப்போது உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுசென்ால் ரூ. 1.50 லட்சத்தை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்து ஒசூா் சாா் ஆட் சியா் பிரியங்காவிடம் ஒப்படைத்தனா். படவரி... பறிமுதல் செய்த ரூ. 1.50 லட்சத்தை ஒசூா் சாா் ஆட்சியரிடம் ஒப்படைத்த பறக்கும் படை அதிகாரிகள்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com