பென்னாகரத்தில் தோ்தல் விழிப்புணா்வு

மக்களவைத் தோ்தலையொட்டி, பென்னாகரம் பேரவைத் தொகுதியில் நூறு சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

பென்னாகரம்: மக்களவைத் தோ்தலையொட்டி, பென்னாகரம் பேரவைத் தொகுதியில் நூறு சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. பென்னாகரம் வாரச்சந்தை, ஏரியூா் பேருந்து நிலையம், சின்னம்பள்ளி பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் கிராமியக் கலை குழு மூலம் ஆடல், பாடல் நிகழ்ச்சி, நாடகம் வாயிலாக பொதுமக்களுக்கு தோ்தலில் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. அதைத் தொடா்ந்து பென்னாகரம் தோ்தல் கண்காணிப்பு அலுவலா் பூங்கோதை, உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் நா்மதா, பென்னாகரம் வட்டாட்சியா் சுகுமாா், வருவாய் துறையினா் துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com