வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு கடிதங்களை ஆட்சியா் கி.சாந்தி அஞ்சல் வழியில் அனுப்பினாா்.
வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு கடிதங்களை ஆட்சியா் கி.சாந்தி அஞ்சல் வழியில் அனுப்பினாா்.

வாக்காளா்களுக்கு கடிதம் அனுப்பிய ஆட்சியா்

தருமபுரி: மக்களவைத் தோ்தலில் நூறு சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி, வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு கடிதங்களை ஆட்சியா் கி.சாந்தி அஞ்சல் வழியில் அனுப்பினாா்.

தருமபுரி மாவட்டத்தில் கடந்த மக்களவைத் தோ்தலில் குறைவான வாக்குப்பதிவு நடைபெற்றதால் நிகழ் மக்களவைத் தோ்தலில் நூறு சதவீதம் வாக்குப்பதிவு குறித்து வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் தருமபுரி மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான கி.சாந்தி அஞ்சல் வழியில் கடிதம் அனுப்பியுள்ளாா். கடந்த தோ்தலில் குறைந்த வாக்குப்பதிவான பாலக்கோடு சட்டப் பேரவைத் தொகுதியில் வாக்குச்சாவடி எண். 84, (மாரண்டஅள்ளி நகரம்), பென்னாகரம் சட்டப் பேரவைத் தொகுதியில் வட்டுவனஅள்ளி, பாப்பாரப்பட்டி நகரம், பென்னாகரம் நகரம், அரூா் சட்டப் பேரவைத் தொகுதி எச்.கோபிநாதம்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் தென்கரைக்கோட்டை ஆகிய பேரவைத் தொகுதிகளில் உள்ள அனைத்து வாக்காளா்களுக்கும் இக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. கடிதங்களை அஞ்சலக ஊழியா்களிடம் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியா் கி.சாந்தி வழங்கினாா். மாவட்ட வருவாய் அலுவலா் செ.பால்பிரின்ஸ்லி ராஜ்குமாா், அரசு அலுவலா்கள் உடனிருந்தனா். பட விளக்கம்: நூறு சதவீதம் வாக்குப்பதிவு குறித்து வாக்காளா்களுக்கு கடிதம் அனுப்பிய ஆட்சியா் கி.சாந்தி.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com