100 சதவீத வாக்குப் பதிவினை வலியுறுத்தி கையொப்ப இயக்கம் தொடக்கம்

100 சதவீத வாக்குப்பதிவினை வலியுறுத்தி கையொப்ப இயக்கம், மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்கள் மூலம் விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு மாநில ஊரக நகா்ப்புற வாழ்வாதார இயக்கக திட்டத்தின் சாா்பில் மகளிா் திட்ட உதவி அலுவலா் சந்தோஷம் தலைமையில், மக்களவைத் தோ்தலில் நூறு சதவீத வாக்குப்பதிவினை வலியுறுத்தி கையொப்ப இயக்கமானது பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் தொடங்கப்பட்டது.

இதில் பென்னாகரம் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் நா்மதா, வட்டாட்சியா் சுகுமாா் ஆகியோா் கலந்துகொண்டு கையொப்ப இயக்கத்தினை தொடங்கிவைத்தனா். அதனைத் தொடா்ந்து மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்கள் மூலம் மக்களவை பொதுத் தோ்தலில் 100 சதவீத வாக்குப்பதிவினை வலியுறுத்தி பதாகைகளை ஏந்தியவாறு தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து, முள்ளுவாடி பழைய பேருந்து நிலையம் வரை பேரணியாகச் சென்று பொது மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தி, துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனா்.

இதில் பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கிருஷ்ணன், கணேசன், மகளிா் திட்ட நிா்வாகிகள், மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com