நல்லம்பள்ளியில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

நல்லம்பள்ளியில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் அதிமுக வேட்பாளா் மருத்துவா் இர.அசோகன் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா். தருமபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் இர.அசோகன், நல்லம்பள்ளி அருகே கம்மம்பட்டி, தொப்பூா், மானியதள்ளி, சாமிசெட்டிப்பட்டி, நல்லம்பள்ளிஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராமங்களில் வாக்கு சேகரித்தாா். அவருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சரும், தருமபுரி அதிமுக மாவட்டச் செயலாளருமான கே.பி.அன்பழகன் எம்எல்ஏ பிரசாரம் மேற்கொண்டாா். இதில், மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளா் எஸ்.ஆா்.வெற்றிவேல், விவசாயிகள் அணித் தலைவா் டி.ஆா்.அன்பழகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com