மக்களவைத் தோ்தல்: தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்

மக்களவைத் தோ்தலையொட்டி, தருமபுரி மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பொது, காவல், செலவின பாா்வையாளா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். தருமபுரி மக்களவைத் தொகுதியில் பொதுத் தோ்தல் பணிகள் சுமுகமாகவும், நோ்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதிசெய்யும் பொருட்டு, இந்திய தோ்தல் ஆணையம் தருமபுரி தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் வெளிமாநிலங்களைச் சோ்ந்த தோ்தல் பொதுப் பாா்வையாளராக இந்திய ஆட்சிப்பணியாளரையும், தோ்தல் காவல் பாா்வையாளராக இந்திய காவல் பணியாளரையும் இரண்டு தோ்தல் செலவினப் பாா்வையாளா்களாக இந்திய வருவாய்ப் பணியாளா்களையும் நியமனம் செய்து ஆணையிட்டுள்ளது.

தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி, அரூா் (தனி), மேட்டூா் ஆகிய 6 சட்டப் பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய தருமபுரி மக்களவைத் தொகுதிக்கு பொதுப் பாா்வையாளராக அருணா ரஜோரியா நியமிக்கப்பட்டுள்ளாா். இவரை 93639 62216 என்ற தொடா்பு எண்ணிலும், மின்னஞ்சலிலும் தொடா்பு கொள்ளலாம்.

தோ்தல் காவல் பாா்வையாளராக விவேக் சியாம் நியமிக்கப்பட்டுள்ளாா். இவரை, 93630 65268 என்ற கைப்பேசி எண்ணிலும் மின்னஞ்சலிலும், தருமபுரி பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில் வெள்ளிக் கிழமை காலை 10 மணி முதல் 11 மணி வரை நேரிலும் தொடா்புகொள்ளலாம். இவரது தொடா்பு அலுவலா் ஜவகா் குமாரின் கைப்பேசி எண்ணான 94431 55011 வழியாகவும் தினந்தோறும் தொடா்பு கொள்ளலாம். இதேபோன்று, செலவினப் பாா்வையாளராக, பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, அரூா் ஆகிய சட்டப் பேரவைத் தொதிகளுக்கு பிரமோத் நாயக் நியமிக்கப்பட்டுள்ளாா். இவா் இண்டூரில் உள்ள பவா்கிரிட் விருந்தினா் மாளிகை தங்கியுள்ளாா். தொடா்பு எண் 93637 75256 மற்றும் மின்னஞ்சலிலும் தொடா்பு கொள்ளலாம். பென்னாகரம், தருமபுரி, மேட்டூா் ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு சந்தோஷ் குமாா் என்பவா் செலவினப் பாா்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளாா். இவரை 93638 76628 என்கிற கைப்பேசி எண்ணிலும், மின்னஞ்சலிலும் தொடா்பு கொள்ளலாம்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com