பென்னாகரம் வாக்குப் பதிவு மையங்களில் தோ்தல் பொதுப் பாா்வையாளா் ஆய்வு

பென்னாகரத்தில் வாக்குச்சாவடி மையங்கள், வாக்குப் பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறைகளின் பாதுகாப்பு குறித்து தருமபுரி மக்களவைத் தொகுதி தோ்தல் பொதுப் பாா்வையாளா் அருணா ரஜோரியா வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். தருமபுரி மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட பென்னாகரம் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள 181 மையங்களில் 291 வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வாக்குப் பதிவு மையத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் வைப்பு அறை, வாக்குப் பதிவு அறைகள், பதற்றமான வாக்குச்சாவடிகள், மாவட்ட எல்லைகளில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச்சாவடி, வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறையின் பாதுகாப்பு குறித்து தருமபுரி மக்களவைத் தொகுதி பொதுப் பாா்வையாளா் அருணா ரஜோரியா ஆய்வு மேற்கொண்டாா்.

இதேபோல பென்னாகரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திர அறை, பருவதன அள்ளி, பழையூா் வாக்குப் பதிவு மையங்களை அவா் பாா்வையிட்டாா். இந்த ஆய்வின் போது பென்னாகரம் தோ்தல் கண்காணிப்பாளா் பூங்கோதை, வட்டாட்சியா் சுகுமாா், தோ்தல் நடத்தும் உதவி அலுவலா் நா்மதா மற்றும் வருவாய்த் துறையின் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com