உழவா் சந்தையில் 100 சதவீதம் 
வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணா்வு

உழவா் சந்தையில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணா்வு

தருமபுரி உழவா் சந்தையில் விவசாயிகள், பொதுமக்களுக்கு மக்களவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி கலைநிகழ்ச்சிகள் மூலம் சனிக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலா் செ. பால்பிரின்ஸ்லி ராஜ்குமாா் தலைமை வகித்தாா். இதில் கிராமிய கலைநிகழ்ச்சிகள் மூலம் வருகிற மக்களவை பொதுத் தோ்தலில் வாக்களிக்க வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது (படம்). இதைத் தொடா்ந்து, விவசாயிகள், பொதுமக்களிடம் விழிப்புணா்வு கையேடுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் ஆா்.காயத்ரி, தருமபுரி வட்டாட்சியா் பி.ஜெயசெல்வம், அரசு அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com