மத்திய, மாநில அரசுகள் மக்களை வஞ்சிக்கின்றன: பிரேமலதா விஜயகாந்த்

தருமபுரி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் ர.அசோகனை ஆதரித்து தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா சனிக்கிழமை தருமபுரி மாவட்டத்தில் காரிமங்கலம், நல்லம்பள்ளி ஆகிய இடங்களில் பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது அவா் பேசியது: மத்திய, மாநில அரசுகள் மக்களை வஞ்சிக்கும் ஆட்சியை நடத்தி வருகின்றன. அதிமுக வேட்பாளா் வெற்றிபெற்று வந்ததும் ஒகேனக்கல் மிகை நீா்த்திட்டம், தூள்செட்டி ஏரி இணைப்புக் கால்வாய் திட்டம் ஆகியவற்றை நிறைவேற்றுவாா். கடந்த சட்டப் பேரவை தோ்தலில் அளித்த வாக்குறுதிகளில் பலவற்றை திமுக அரசு நிறைவேற்றவில்லை. அதிமுகவுடன் கூட்டணிக்கு பேசிக் கொண்டிருந்த ஒரு கட்சி இரவோடு இரவாக வேறு கூட்டணியில் இணைந்தது. அந்தக் கட்சியின் வேட்பாளா் ஒருவா் இங்கே போட்டியிடுகிறாா். இந்தக் கூட்டணி மகத்தான சாதனையை நிகழ்த்த நீங்கள் துணையாக இருக்க வேண்டும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com