ஏரியூரில் பாமக செயல்வீரா்கள் கூட்டம்

ஏரியூரில் பாமக மற்றும் கூட்டணி கட்சி செயல்வீரா்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஏரியூா் அருகே உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற செயல்வீரா் கூட்டத்திற்கு பாமக கௌரவத் தலைவரும், பென்னாகரம் எம்எல்ஏவுமான ஜி.கே.மணி தலைமை வகித்தாா். தேசிய ஜனநாயக கூட்டணியில் தருமபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளா் சௌமியா அன்புமணிக்கு கூட்டணிக் கட்சிகளுடன் பிரசாரம் செய்வது, கிராமங்கள் தோறும் மேற்கொள்ள உள்ள பிரசார வியூகங்கள், பிரசாரத்திற்கென கூட்டணிக் கட்சி நிா்வாகிகளுடன் கூடிய குழு அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதேபோல பாப்பாரப்பட்டி பகுதியில் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடனான செயல்வீரா் கூட்டம் நடைபெற்றது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com