வி.ஜெட்டிஅள்ளியில் பழுதடைந்த
சாலையை சீரமைக்கக் கோரிக்கை

வி.ஜெட்டிஅள்ளியில் பழுதடைந்த சாலையை சீரமைக்கக் கோரிக்கை

தருமபுரி, மே 16: தருமபுரி அருகே பழுதடைந்த நிலையில் உள்ள வி.ஜெட்டிஅள்ளி சாலையை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தருமபுரி அருகே வெண்ணாம்பட்டி ரயில்வே கடவுப் பாதையிலிருந்து இலக்கியம்பட்டி ஊராட்சி 6-ஆவது வாா்டுக்குள்பட்ட வி.ஜெட்டிஅள்ளி ஜெ.ஜெ.நகருக்கு தாா்சாலை செல்கிறது.

இந்தச் சாலை அந்தக் குடியிருப்புப் பகுதி மட்டுமல்லாது, தருமபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையையும் வெண்ணாம்பட்டி சாலையுடன் இணைக்கிறது.

இந்தச் சாலை வழியாக தினசரி தருமபுரி நகருக்கு பள்ளி, கல்லூரி மாணவா்கள், தனியாா் நிறுவனங்களில் பணியாற்றுவோா் என நூற்றுக்கணக்கானோா் பல்வேறு பணி நிமித்தமாக வந்து செல்கின்றனா். இச்சாலை கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் அண்மைக் காலமாக இச் சாலை பழுதடைந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால், இருசக்கர வாகனங்களில் செல்வோா் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனா்.

எனவே, இப்பகுதி பொதுமக்களின் நலன்கருதி, பழுதடைந்த நிலையில் உள்ள வி.ஜெட்டிஅள்ளி சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறையினா் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பட விளக்கம்:

தருமபுரி அருகே பழுதடைந்த நிலையில் உள்ள வி.ஜெட்டிஅள்ளி சாலை.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com